நாளை நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு அக்கிராமம் முழுமையான சிசிடிவி கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இதனையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்க பசும்பொன் கிராமம், கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 78 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர் கண்காணிப்பு கோ புரங்கள் அமைத்தும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *