நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்து இருப்பதன் மூலம் அவரது அரசியலுக்கு பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் சமத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இந்து ,இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து சமாக மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்து இருப்பதன் மூலம் ரஜினியின் அரசியலுக்கு பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார் .

