தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது – செங்கோட்டையன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தொழில் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தினை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், தடையற்ற மின்சாரம் தொழில் துறைக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *