தொடர்ந்து 100 நாட்களை கடந்து, 100 அடிக்கும் மேலாக நீடிக்கிறது மேட்டூர் அணை…..

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 நாட்களைக் கடந்து, 100 அடிக்கும் மேலாக நீடிக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2006 நவம்பர் 6ம் தேதி வரை 424 நாட்கள் 100 அடியாக நீடித்தது. மேலும், 2011ம் ஆண்டில் 78 நாட்களும், 2014ம் ஆண்டில் 42 நாட்களும் மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்தது. நடப்பாண்டில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101ஆவது நாளாக 100 அடிக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் அணைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 13,700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 103.76 அடியாகவும், நீர் இருப்பு 69.80 டிஎம்சி ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *