தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புத்தாண்டு தினத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், அதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் உள் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2018-01-01

