தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையான இங்கு, கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன்.

தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த நாட்களில் கிலோ ஒன்றிற்கு 25 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது 40 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரை, கேரட் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *