தி.மு.க.வின் தனித்தன்மை, தன்மானத்துடன் உரசிப் பார்க்க வேண்டாம்; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை……..

தி.மு.க.வின் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைக்க வேண்டாம் என்றும், புதிய உத்வேகத்துடன் தி.மு.க.வின் செயல்பாடு தொடரும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள் அறிக்கையில் தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால் மக்கள் தந்த விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயகப் போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவத்தை தி.மு.க.வுக்கு கருணாநிதி வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமை விலைமதிப்பற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து, தனித்தன்மையை வென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பணநாயகத்திற்குப் ஆர்.கே.நகர் தொகுதி பலியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், பணம் கொடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் மீது, வாக்குப்பதிவு அன்றே தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். யாரையோ மறைமுகமாக தி.மு.க. ஆதரிக்கிறது என, திரைமறைவில் ஒளிந்து கொண்டு, அவதூறு கிளப்பும் விஷம பிரசாரத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தல் முடிவுகளில் பின்னடைவை ஆராய்ந்து, புதிய உத்வேகத்துடன் தி.மு.கவின் செயல்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தி.மு.க.வின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும், உரசிப் பார்க்க வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

* வெற்றி பெற்றால் மக்கள் தந்த விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயகப் போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவம் திமுகவிடம் உள்ளது

* ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து, தனித்தன்மையை வென்றுள்ளது

* பணநாயகத்திற்கு ஆர்.கே.நகர் தொகுதி பலியாகிவிட்டது

* பணம் கொடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் மீது, வாக்குப்பதிவு அன்றே தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது

* யாரையோ மறைமுகமாக தி.மு.க. ஆதரிக்கிறது என, அவதூறு கிளப்பும் விஷம பிரசாரத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

* இடைத்தேர்தல் முடிவுகளில் பின்னடைவை ஆராய்ந்து, புதிய உத்வேகத்துடன் தி.மு.கவின் செயல்பாடு தொடரும்

* தி.மு.க.வின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும், உரசிப் பார்க்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *