திருவள்ளூரில் வட கிழக்கு பருவ மழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம்​ விளக்கினார். அப்போது பேசிய அவர், வட கிழக்கு பருவமழையால் 200 இடங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகளாக கண்டறியப்பட்டு கண்காணித்து வருவதாகவும், தேவையான நிவாரண உதவிகளை வழங்க பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய 60 மண்டல குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பெரு மழை தொடர்பாக வருவாய் கோட்ட அளவில் புகார் எண்களையும் அவர் அறிவி​த்துள்ளார்.

​ ​அதன்படி திருவள்ளூர் கோட்ட அளவில் 044 27660248, 9940318661, பொன்னேரி கோட்ட அளவில் 044 27974043, 9840804356 திருத்தணி கோட்ட அளவில் 044 27885877 , 9994123566 மற்றும் அம்பத்தூர் கோட்ட அளவில் 044 26541221, 9444555950 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாடு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044 27664177, 044 27666746 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *