திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5பேர் உயிரிழப்பு; பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய போது நிகழ்ந்த பரிதாபம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே லாரியும் – காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊரான வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கி 5பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *