திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் டைகர் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷண்முகநாதன் என்பவர் தனது உடைமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட 191 கிராம்  தங்கத்தின்   மதிப்பு 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *