திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து: பேருந்து ஓட்டுநர் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்த விபத்தில், ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். பாண்டிச்சேரியிலிருந்து பயணிகளுடன் நாகர்கோவிலை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

கல்லுப்பட்டி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 25 பயணிகள் படுகாயமடைந்தனர். இதற்கிடையே, பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பேருந்தும் உடனடியாக நிறுத்த முடியாமல் சாலையோரமாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *