திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

