தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் – ஓ.பி.எஸ்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுப்பது சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *