தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணை

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி-யும், உத்தரவு செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்த மனுவை கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், இன்று முதல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். இதன்படி, இன்று காலை 10-30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனை வரும் 27-ம் தேதிவரை தினமும் விசாரிக்க உள்ளதாக சத்தியநாராயணன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *