தமிழத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரையே கர்நாடகவிடம் தாம் கேட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கையாகவே கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்டதாக தெரிவித்தார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீரையே, கர்நாடகா அரசிடம் தாம் கேட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வர இருப்பதாகவும், தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமான இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

