தமிழக நீர்ப்பாசன வசதிகளை நவீனமயப்படுத்த 2 ஆயிரத்து 37 கோடி ரூபாய் கடன்; உலக வங்கியுடனான ஒப்பந்ததில் மத்திய அரசு கையெழுத்து…

தமிழக நீர்ப்பாசன வசதிகளை நவீனமயப்படுத்த உலக வங்கியிடம் ரூ.2 ஆயிரத்து 37 கோடி ரூபாய் கடனுதவி பெற மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழக பாசன வசதியை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக உலக வங்கி 2 ஆயிரத்து 037 கோடியே 85 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளன. பாசன வசதி நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாய தொழில் நுட்ப மேம்பாடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தல், சிறு குறு விவசாயிகளின் சந்தை வாய்ப்பை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உலக வங்கி வழங்க உள்ள கடன் உதவி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து ,800 நீர்ப்பாசனக் குளங்கள், 477 தடுப்பு அணைகள் புதுப்பிக்கவும் நவீனப்படுத்தப்படவும் உள்ளன. இதன் மூலம் 5 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தமிழக பாசன வசதியை நவீனப்படுத்த உலக வங்கி 2 ஆயிரத்து 037 கோடியே 85 லட்சம் ரூபாய் கடனுதவி

* கடனுதவி ஒப்பந்தத்தில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் உலக வங்கி கையெழுத்து

* விவசாய தொழில் நுட்ப மேம்பாடு

* நீர் மேலாண்மையை மேம்படுத்தல்

* சிறு குறு விவசாயிகளின் சந்தை வாய்ப்பை அதிகரித்தல்

* 4 ஆயிரத்து ,800 நீர்ப்பாசனக் குளங்கள், 477 தடுப்பு அணைகள் புதுப்பிக்கவும், நவீனப்படுத்தப்படவும் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *