தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த பெரியய்யா, மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள சுமித் சரண், கோவை மாநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஐஜி பிரமோத் குமார், ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கான அந்தஸ்து, ஏடிஜிபியாக இருந்த நிலையில் தற்போது ஐஜியாக குறைக்கப்பட்டது. இதேபோல் காவல் பொதுப் பிரிவு ஐஜி சாரங்கன், காவல்துறை பயிற்சி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *