தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடும் இயக்கம் திமுக என்று தெரிவித்தார். மேலும் இனி வரும் நாட்களில் திமுக நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கப்படாது என்றும், இன்றைய அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத்தை கூட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

