தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இலங்கைக்கும், மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
2017-11-02

