தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில உள்ள மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும். இங்கு, காலை முதலே நிலவிய பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் அதிக அளவு காணப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவு பனிமூட்டம் பெய்ததால் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பெரம்பலூரில், திருச்சி  – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிக அளவு காணப்பட்டது.

இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். காலை எட்டு மணி வரை பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *