கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லாத நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அதே தொகுதியில் இரண்டாவதாக அதிக வாக்குகள் பெற்ற நபரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
2017-12-26

