தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் இந்த 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலுக்கு முன்னதாகவே இந்த மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை தொடர்ந்து மூடி வைக்க டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

