டெல்லியில், பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு; தீவிபத்து குறித்து உரிய விசாரணை நடத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு

டெல்லியில், பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில், பாவனா தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பிளாஸ்டிக் குடோனில், நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்திலும், பிளாஸ்டிக் என்பதாலும், குடோன் முழுவதும், மளமளவென தீ பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *