டெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுவரை இல்லாத வகையில் ஒருநாளில் நாலாயிரத்து 831முறை ரயில்களை இயக்க உள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் மின்சாரத்தால் இயங்குவதால் காற்றுமாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை. தலைநகரில் புகைமூட்டத்தால் காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் அதைக் குறைக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாகவும், விழாக்காலத்தை முன்னிட்டும் ஒருநாளுக்கு நாலாயிரத்து 831முறை ரயில்களை இயக்க உள்ளது.

இதற்காக ஏற்கெனவே உள்ளதைவிடக் கூடுதலாக 21ரயில்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்க உள்ளது. இவற்றில் சிவவிகார், திரிலோக்புரி, சஞ்சய்லேக் பிரிவில் 14மெட்ரோ ரயில்கள் ஒரு நாளில் 730முறை இயக்கப்படுவதும் அடங்கும். 18கிலோமீட்டர் நீளமுள்ள இந்தத் தடத்தில் 15நிலையங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *