அமெரிக்காவின் டெக்சாஸில் 100 கோடி டாலர் மதிப்பிலான வளாகத்தைக் கட்டமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் உற்பத்தி மையங்களை ஆரம்பிக்கும் பெரு நிறுவனங்கள், உள்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து உற்பத்தியாகி அமெரிக்காவில் விற்பனையான ஐபோன்களுக்கும் அதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் உள்நாட்டில் 3000 கோடி டாலர் முதலீடு செய்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தது. அரசியல் ரீதியான அழுத்தங்கள் வந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் டெக்சாஸ் வடக்கு ஆஸ்டினில் 100 கோடி டாலர் மதிப்பில் புதிய வளாகம் ஒன்றைத் திறப்பதாக அறிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

