ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்கை சீர்குலைக்க திட்டம் – MLA ரோஜா குற்றச்சாட்டு

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள செல்வாக்கை சீர்குலைக்க, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிடுவதாக நடிகை ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளரிடம் பேசிய ரோஜா, மக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அரசு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு நாடகம் நடத்துவதாக குற்றம்சாட்டி வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *