ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பான் மாவட்டத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற ஜீப் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஜம்முவை சேர்ந்த பவன்குமார், விஜய்குமார் மற்றும் உதம்பூரை சேர்ந்த ஓம்பிரகாஷ் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2017-12-02

