ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் சாலைகள் மூடப்பட்டதால் பழங்கள் காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீர்பாஞ்சல் மலைத்தொடர் பனிமூடிக் காணப்படுகிறது. இதேபோல் தோடா, பதர்வா ஆகிய பகுதிகளிலும் பனி பெய்து வருகிறது.
இது குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகல்சாலை கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்துள்ள பழங்கள் காய்கறிகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

