ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையின்போது 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஜ்பேரா அருகே, வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விடிவதற்கு முன்னரே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 6 தீவிரவாதிகள் அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் வசமிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

