ஜனவரி 3ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னையில் ஜனவரி 3ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், ஜனவரி 3ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஜனவரி 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டம் பற்றியும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *