ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியாவில் இருந்து செயல்படும் அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் ஐஎஸ் இயக்கத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் மொகாதிஷூ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அமெரிக்க விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

