சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார்.
கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் கருணாநிதியிடம் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை கூறியதாக தெரிவித்தார். மேலும் கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் நேர்மையான முறையில் போராட்டம் நடத்தி வருவதாகவும், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் நடிகர் ரனிஜிகாந்தின் அறிவிப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்துள்ளது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

