பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் இடைத்தேர்தலை ரத்து செய்தால், நேர்மையாக தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அவர் கூறினார்.

