சென்னை மாதவரத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருபதுக்கு மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மாதவம் மஞ்சம்பாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்குத் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரெனப் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து புகைநாற்றம் வந்துள்ளது. இதையடுத்து அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 8பேரும் அங்கிருந்து வெளியே வந்தனர். இதனை தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்தது.
மின்கசிவால் தீவிபத்து நேர்ந்ததா? யாரும் தீவைத்துக் கொளுத்தினரா என்கிற கோணத்தில் மாதவரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

