சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம்… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பேருந்து கட்டண உயர்வு பிரச்சனை குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதன்படி இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு பிரச்சனை மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *