ஆவடியில் உள்ள விமான படை மையத்தில் மத்திய விமான படை வீரர்களுக்கு ஆட்டோ மொபைல் பிட்டர் மற்றும் ஆட்டோ மொபைல் டெக்னிசியன் என இரண்டு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களை கையாளுதல், விமானங்களை பழுதுபார்த்தல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சுமார் 44 வாரங்களாக 320 வீரர்களுக்கு வழங்கப்பட்டன. இவ்விழாவில் பங்கேற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் ஹைதராபாத், பாகும்பெட் விமானப்படை மையத்தின் கமாண்டர் சி.கே.குமார் வாயுசேன மெடல் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இறுதியாக பயிற்சியின்போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன. பயிற்சி முடித்த வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
2017-12-30

