சென்னையில் மீண்டும் தோனி: தக்கவைக்கப்படும் வீரர்கள் பெயர் வெளியீடு

ஐபிஎல் 2018 தொடருக்காக தங்கள் அணியில் மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை அணிகள் வெளியிட்டுள்ளன.
11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்.
இந்நிலையில், நேரடியாகத் தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல் வீரர்களை அணிகள் தக்க வைத்துள்ளன. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் சன் ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை இண்டீஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தக்க வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீரை எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *