முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னி குவிக்கிற்கு இங்கிலாந்து மற்றும் தேனியில் சிலை நிறுவ, திமுக உதவி செய்ய தயாராக இருப்பதாக, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, பென்னிகுவிக் வாரிசுகளான, சூசன் ஃபெர்ரோ, ஷெரோன் பில்லிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, பென்னி குவிக்கிற்க்கு லண்டன் மற்றும் தமிழகத்தின் தேனியில் சிலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர். இதைத் தொடர்ந்து, பென்னி குவிக்கிற்கு சிலை அமைப்பதற்கான உதவியை, திமுக நிச்சயம் அளிக்கும், என அவர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய புத்தகம் ஒன்றின் ஆங்கில மொழிப்பெயர்பை அவர்களுக்கு பரிசாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

