சென்னையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தை முறையாக பராமரிக்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபத்தை பராமரிக்க அரசு சார்பில் ஏற்கனவே பல லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையாக பராமரிக்காமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், மணிமண்டப வளாகத்தில் குப்பைகள் பரவிக்கிடக்கின்றன. அம்பேத்கர் மணிமண்டபத்தை பராமரிக்க கோரி போராட்டடம் நடத்தப்போவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

