சூரியனை நெருங்கிய முதல் ஆய்வுக் கலம் பார்கர்

நாசாவின் பார்கர் ஆய்வுக்கலம், இதற்குமுன் வேறெந்த கலமும் நெருங்காத தொலைவில், சூரியனை நெருங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்கர் என்ற கலனை ஆகஸ்ட் 12ஆம் தேதி விண்ணில் ஏவியது நாசா. அதி வேகத்தில் சூரியனை நோக்கிச் செல்லும் பார்கர் தற்போது புதிய வரலாறு படைத்தது.

ஹீலியஸ் 2 என்ற கலம், கடந்த 1976ஆம் ஆண்டு 42.73 மில்லியன் கிலோ மீட்டர் என்ற தொலைவில் சூரியனை நெருங்கியதே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை முறியடித்துள்ள பார்கர், ஹீலியஸ் 2 விண்கலம் சென்ற தொலைவைக் காட்டிலும் சூரியனை நெருங்கிச் செல்கிறது.

2025ஆம் ஆண்டில் சூரியனுக்கு அருகே 60 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி, ஆய்வுகளை மேற்கொள்ளும் பார்கர் சூரியன் குறித்த அரிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *