குஜராத்தின் சூரத்தில் பிரபல வைர வியாபாரி இந்த ஆண்டு ஊழியர்கள் 600 பேருக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளிக்கிறார்.
ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர வியாபார நிறுவனத்தின் தலைவர் சவ்ஜி தொலாக்கியா 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு வீடு, கார் உள்ளிட்ட பரிசுகளை தீபாவளி போனஸாக வழங்கி வருகிறார். அதன்படி இந்த ஆண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்த ஆயிரத்து 600 பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளார். அவர்களில் 600 பேருக்கு மாருதி ஆல்டோ, செலிரியோ உள்ளிட்ட கார்களும், 600 பேருககு ஃபிளாட்களும், வங்கிக் கணக்கில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த போனஸ் அவர்களை மேலும் உற்சாகத்தோடு உழைக்க வைக்கும் என சவ்ஜி தொலாக்கியா தெரிவித்துள்ளார். போனசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு மாற்றுத்திறனாளி மற்றும் பெண்ணுக்கு பிரதமர் மோடி கார்களுக்கான சாவியை வழங்குகிறார்.

