சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் விட்டுச் சென்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து; சொத்துகளை ஏலமிட மத்திய அரசு முடிவு

சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் விட்டுச் சென்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏலத்தில் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரிவினைக்குப் பின்னர் சொந்த நாடுகளில் குடியேறிய சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துகளுக்கு உரிமை கோர முடியாது என்று எதிரிச் சொத்து சட்டத்தில் அண்மையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, 6 ஆயிரத்து 289 எதிரிச் சொத்துகளை அளவிடும் பணிகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் 2 ஆயிரத்து 991 சொத்துகளை அளவிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றை ஏலத்திற்கு விடுவதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் விட்டுச் சென்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏலத்தில் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *