சிலை கடத்தல் வழக்கில் கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சட்டவிரோதமாக பணியில் இருப்பதாக மனுதாரர் முறையீடு

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் கைதான  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா இன்னும் பணியில் இருப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிரான  வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது வழக்கில் கைதான  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சட்டவிரோதமாக பணியில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் 10-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *