சிபிஐ இயக்குனர்களை நீக்கிவிட்டு புதிய இயக்குனர் நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதால்தான் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ரஃபேல் விமானம் குறித்து யார் விசாரணை நடத்தினாலும் இதுதான் கதி என்று பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

