சாதி, மத சார்பற்ற அற வழி அரசியலே ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்; அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தினால் தவறாக முடிந்துவிடும் என்று டிடிவி தினகரன் கருத்து….

ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான சாதி, மத சார்பற்ற அறவழியில் நடைபெறக்கூடிய அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை போயஸ்தோட்டத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான சாதி, மத சார்பற்ற அறவழியில் நடைபெறக்கூடிய அரசியல் என்று விளக்கம் அளித்தார்.

மேலும் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஜனநாயகப் போராட்டங்கள் தமிழகத்தில் இருந்து தான் தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் அரசியலில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று தமக்கு ஆசை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தினால் தவறாக முடிந்து விடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *