கோவை கொடீசியாவுக்கு ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத்துறைக்கு தேவையான உபகரணங்களை கோவை கொடிசியா மூலம் தயாரிக்க மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ். 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இராணுவ தயாரிப்பு மையமாக கோவை கொடிசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் சிறு, குறு தொழிற்துறையினர் பெருமளவு பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டதாக கூறிய நிர்மலா சீதாராமன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

