கேரளாவில் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் வீடிழந்த பொதுமக்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, 600 வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், வயநாடு, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், கனமழை வெளுத்து வாங்குகிறது. இதில், ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்கள் கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாவட்டங்களில், ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, கேரள அரசின், 600 வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு, பலியானோரின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்திருக்கிறது.
