குஜராத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
குஜராத்தில், படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சிக்கும், ஹர்திக் படேல் அமைப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று ஹர்திக் படேல் அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 77 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்நிலையில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிருப்தியில் இருக்கும் படேல் சமூகத்தினரை காங்கிரஸ் பக்கம் திருப்ப ராகுல் முயற்சி செய்து வருகிறார். படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தும் ஹர்திக் படேல் அமைப்பான படிடார் அனமத் அனோலன் சமீதி அக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கும் ஹர்திக் படேலின் அமைப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஹர்திக் படேலின் அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

