காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை, தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின்போது 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. புல்வாமா  மாவட்டத்தில் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கு இடையேயும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் வசமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, ஜம்முவின் சம்பா பகுதியில் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பிடிபட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *