ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாதுராமின் மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நாதுராம் தலைமையிலான கொள்ளை கும்பல் கொள்ளை அடித்துவிட்டு ராஜஸ்தானுக்கு தப்பித்து சென்றது. இந்த கொள்ளை கும்பலைப் பிடிக்க சென்னை தனிப்படை காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றிருந்தனர். நாதுராம் உள்ளிட்ட கொலையாளிகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி மரணமடைந்தார். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நாதுராமின் மனைவி மஞ்சுவை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதே வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாதுராமின் கூட்டாளி நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது.

